Fundamental analysis, Technical analysis
Fundamental Analysis
![]() |
Fundamental Analysis |
அடிப்படை பகுப்பாய்வு என்பது உங்கள் முதலீடுகளை செய்வதற்கு முன் பயன்படுத்தப்பட வேண்டிய பகுப்பாய்வு முறையாகும்.
அதாவது ஒரு நிறுவனத்தின் செயல்பாடுகள்,விற்பனை, வருமானம்,வளர்ச்சி,ஆற்றல், உடைமைகள், கடன்கள், நிர்வாகம், தயாரிப்புகள் மற்றும் ஒரு நிறுவனத்தின் தனிபயனுடைய காரணிகள் போன்ற அனைத்து விவரங்களையும் கொண்டு ஒரு நிறுவனத்தின் தரத்தை மதிப்பிட்டு அதன்பின் முதலீடு முடிவுகளை எடுக்க உதவும் ஒரு வழிமுறை எனலாம்.
சந்தையில் வர்த்தகமாகும் ஒரு நிறுவனத்தின் பங்கானது சரியான விலையில் உள்ளதா என்பதை அடையாளம் காண அடிப்படை பகுப்பாய்வு பெருமளவில் உதவும். நீண்ட நாள் முதலீட்டாளர்களுக்கு இம்முறை அதிகளவில் பயன் தரும்.
ஒரு வெற்றிகரமான முதலீட்டாளர் தனது Portfolio ஒரு பங்கை இணைப்பதற்கு முன்னால் அப்பங்கின் அடிப்படைகளை கண்டிப்பாக ஆராய்வார்.
Technical Analysis
தொழில்நுட்ப பகுப்பாய்வு Technical Analysis என்பது விலை நகர்வுகளை கண்காணிக்கும் ஒரு வழிமுறையாகும்.அதாவது கடந்து சென்ற விலை விவரங்களை கொண்டு எதிர்கால விலை நகர்வுகளை கவனிக்க முற்படும் ஒரு வழிமுறை எனலாம்.
Technical Analysis
![]() |
Technical Analysis |
ஒரு நிறுவனத்தின் மதிப்பையோ அல்லது அடிப்படைகளையோ கருத்தில் கொள்ளாமல் அதன் விலை நகர்வுகள் Price movements மற்றும் வால்யூம் Volume போன்ற விபரங்களை கொண்டு விலைகளின் போக்கை அடையாளம் கண்டு, மேலும் சில சூத்திரங்களை உருவாக்கி அதன்பின் வர்த்தக முடிவுகளை எடுப்பதே தொழில்நுட்ப பகுப்பாய்வின் முக்கியம்சம்.
வரைபட கலையின் Charts உதவியோடு கேண்டில்ஸ்டிக் வடிவங்கள் Candlestick Pattern, இண்டிகேடஸ் Indicators, மூவிங் ஆவரேஜ் Moving Average மேலும் பல பிரபலமான யுத்திகளை இணைத்து ஒரு பங்கு அல்லது கமாடிட்டியின் நுழைய Entry மற்றும் வெளியேறும் Exit நிலைகளை கண்டறிந்து பயன்பெறலாம்.
சந்தையின் ஏற்ற இறக்கங்களுக்கு முக்கிய காரணங்களாக விளங்கும் முதலீட்டாளர்களின் மனநிலையை புரிந்துகொள்ள தொழில்நுட்ப பகுப்பாய்வு Technical Analysis பெருமளவில் உதவுவதால்.
ஒரு சிறந்த வர்த்தக தொழில்நுட்ப பகுப்பாய்வை Technical Analysis மேற்கொள்ளாமல் கண்மூடித்தனமான ஒரு வர்த்தகத்தை கண்டிப்பாக செய்யமாட்டார். Also Read Fundamental analysis of equity
COMMENTS