பங்குவர்த்தகத்தில் விபரம் இல்லாமல் நுழைந்தோ அல்லது லாபம் அளிக்காத ஒரு வர்த்தக திட்டத்தை Trading Plan பயன்படுத்தியோ, நீங்கள் சிறிதாக ஒரு தொகையை இழந்து Accepted Small Loss விட்டீர்கள் என்றால் கவலை கொள்ளாதீர்கள்.
உங்கள் பங்கு வர்த்தகத்தை சிறிய நஷ்டத்தில் இல்லையே நிறுத்தி விட்டு அதில் இருந்து வெளிவந்து பகுப்பாய்வு யுத்திகளை கற்று பயிற்சி எடுத்து, நீங்கள் முன்னர் செய்த Learn and Change mistakes தவறுகளை திருத்திக் கொண்டு உங்கள் வர்த்தகத்தை மேலும் மெருகேற்றி அதன்பின் உங்கள் வர்த்தகத்தை துவங்குங்கள். அது கண்டிப்பாக உங்களுக்கு பயன் தரும்.
அதை விட்டுட்டு விட்டதைப் பிடிக்கிறேன் என்று சொல்லி செய்த தவறையே திரும்ப திரும்ப செய்து இருப்பதையும் விட்டு விடாதீங்க.
![]() |
கோடிஸ்வரன் கனவு |
சம்பாதிக்கபோகும் லாபத்தைமட்டுமே நினைத்து சில மாதங்களிலேயே கோடீஸ்வரனாகி விடலாம் என கனவு கண்டு எங்கேயாவது கடன் வாங்கி காசை போட்டு மாட்டிக்கொள்ளாதீங்க.
நீங்கள் செய்யும் முதலீட்டில் ஒரு மாதத்திற்கு 5% சம்பாதித்தாலே அது மிகப்பெரிய விஷயம் ஒரு வருடத்தில் உங்களுடைய முதல் ஈடானது 60% உயர்ந்து லாபத்தை கொடுக்கும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
![]() |
பட்டப்பின் கல்வி Learn from Mistakes
|
என்னதான் சொன்னாலும் செய்வதை தான் செய்வேன் என்று எந்த ஒரு விஷயத்தையும் கற்றுக்கொள்ளாமல் பணத்தை இழந்துவிட்டு அதன்பின் இனிமே பங்கு வர்த்தகம் செய்தால் அதை பற்றி முழுதாக கற்றுக்கொண்டு தான் செய்வேன்".
என தாமதமாக யோசித்து செயல்படுவதைவிட முன்கூட்டியே பங்குவர்த்தகம் சம்பந்தப்பட்ட விவரங்கள் Informations ஆய்வுகளை செய்வதற்கான பயிற்சிகள் Technical Tools மற்றும் தொழில்நுட்பங்கள் போன்ற அனைத்தையும் முடிந்தவரை கற்று, அதன்பின் உங்கள் வர்த்தகத்ததை தொடருங்கள்.
![]() |
பங்குவர்த்தகம் ஒரு டைம் பாஸ் ?
|
நேரத்தை கடத்துவதற்காக பங்குவர்த்தகத்தை தேர்ந்தெடுப்பது நல்லது இல்லை. பங்குவர்த்தகம் ஒரு கருத்தார்ந்த தொழில். இந்த தொழிலை விளையாட்டுத்தனமாக செய்யாமல் மிகுந்த கவனத்தோடு பொறுமையாக இருந்தால் தான் பங்குவர்த்தகத்தில் வெற்றி அடைய முடியும்.
அதை மீறி இந்த வர்த்தகத்தை ஒரு " டைம் பாஸாக " Time Pass செய்து வருபவர்கள் பலர் இதில் தொடர்ந்து நீடித்தது இல்லை என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
Post a Comment
Post Your Valuable Comments 💬 And Requests In The Comment Section🗳️
If You Like👍 This Post Please Share It On Social Website🌐