வர்த்தக திட்டம் - Trading Plan
சரியான திட்டம் இல்லா எந்த ஒரு செயலும் நினைத்த இலக்கை அடைவது இல்லை என்பது நீங்கள் அறிந்ததுதான்.ஒரு சரியான வார்த்தை திட்டத்தை உருவாக்க ஒரு வர்த்தகர் சில கோட்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியம் அவை :
1. உங்களின் மனநிலையை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வது.
2. சந்தை துவங்கும் முன்னரே நீங்கள் அன்று செய்யப்போகும் வர்த்தகத்திற்கான ஆய்வுகளை மேற்கொள்வது.
3. நீங்கள் வர்த்தகம் செய்ய போகும் ஒரு பங்கையோ Stock அல்லது Commodity தேர்ந்தெடுப்பதற்கான ஒரு சரியான வழி முறையை பின்பற்றுவது.
4. நன்கு பரிசோதிக்கப்பட்ட ஒரு யுக்தியை உபயோகித்து நீங்கள் தேர்ந்தெடுத்த பங்கின் நுழைவு Entry மற்றும் வெளியேறும் விலையை Exit Price முன்கூட்டியே நிர்ணயித்துக் கொள்வது.
5. லாபம் மற்றும் நஷ்டம் ஆகிய இரண்டிற்கும் சரியான விகிதத்தை முன்கூட்டியே தீர்மானித்துக் கொள்வது.
6. உங்கள் வர்த்தகத்தின் வெற்றி சதவீதங்களை சரியாக அளந்து தவறுகள் ஏதேனும் இருந்தால் அதை அவ்வப்போது அவ்வப்போதே சரிசெய்து மெருகேற்றி கொள்வது.
7. உங்கள் தீர்மானங்களில் இருந்து மாறாமல் அதைக் கடைப்பிடிப்பது.
போன்றவைகள் அனைத்திலும் கவனம் செலுத்துவதன் மூலம் நீங்கள் ஒரு சரியான வர்த்தக திட்டத்தை உருவாக்கி, ஒரு சரியான பங்குகளில் அல்லது கமாடிட்டியில் சரியான விலையில் நுழைந்து Entry, சரியான நேரத்தில் லாபங்களை Profits வெளியே எடுக்க முடியும்.
ஒரு சிறந்த வர்த்தகர் என்பவர், பகுப்பாய்வுகளை மேற்கொண்டு அதன்பின் பலரால் முன்பே கண்டுபிடிக்கப்பட்ட சூத்திரங்களை தேர்ந்தெடுத்தோ அல்லது அவராகவே ஒரு புதிய சூத்திரத்தை உருவாக்கியோ, அதை உபயோகித்து அவருக்கென ஒரு யுக்தியை வடிவமைப்பார்.
அதன்பின் அந்த யுக்தியை கடந்து சென்ற விலை நகர்வுகளில் நன்கு பரிசோதித்து அந்த யுத்தியின் வெற்றி சதவிதங்களை அளவிட்டு திருப்தி பெற்றபின், அவரது முதலீட்டிற்கும் நேரத்திற்கும் ஏற்ப சரியான ஒரு வர்த்தக திட்டத்தை Proper Trading Plan வடிவமைப்பார்.
அவர் உருவாக்கிய திட்டத்தின்படி அவருக்கு பங்குகள் கிடைக்கப்பெற்றால் மட்டுமே வர்த்தகம் செய்வது, தேவையற்ற பயங்களைவிடுத்து நம்பிக்கையுடன் செயல்படுவார்.
Key points : வர்த்தகத்தை திட்டமிடுங்கள், திட்டத்தை செயல்படுத்துங்கள், செயல் படுத்தியதை கண்காணியுங்கள், சாதக பாதகங்களை அடையாளம் காணுங்கள், தவறுகளை சரி செய்யுங்கள், மேம்படுத்துங்கள் வெற்றி பெறுங்கள்.
நேரத்தின் முக்கியத்துவம் - Time Management
வர்த்தகத்தில் மிக முக்கிய பங்குவகிப்பது நேரம்.
மிகக்கடுமையான ஆய்விற்கு பிறகு அருமையான ஒரு வர்த்தக திட்டத்தை Trading Plan உருவாக்கி அதை பயன்படுத்தும் தருணத்தில் நேரம் Timing தவறவிட்டால், அனைத்தும் வீணாகும். அதை மீறி, நேரம் தாழ்த்தி உங்கள் திட்டத்தை மாற்றி அமைத்தால் அதன் வலிமையும், வெற்றி சதவிகிதமும் குறைய நேரிடும். ஆதலால் நேரத்தின் முக்கியத்துவத்தை நீங்கள் கண்டிப்பாக புரிந்து கொள்ளுதல் அவசியம்.
வர்த்தக மனநிலை - Trading Mindset
அனைத்து வர்த்தகத்திலும் விலைகளை மேலும் கீழுமாய் விரட்டும் பெரும் சக்தி வர்த்தகரின் மனநிலைதான் எனலாம்.தொடர்ந்து மேலும் கீழுமாய் வேகமாக நகரும் விலைகளை ஒரு புதிய வர்த்தகர் கண்டு வியந்து அதன்பின் கோடீஸ்வரன் கனவு கொண்டு சந்தைக்கு அடிமையாகி கண்மூடித்தனமான வர்த்தகத்தை செய்து நஷ்டம் அடைந்து விடுவார். அதன்பின் பங்குவர்த்தகத்தை குறைகூறிக் கொண்டோ இல்லை அதிக கர்வத்தோடோ அல்லது பயத்தோடோ, மாறி மாறி செயல்பட்டு தொடர்ந்து நஷ்டத்தையே அடைவார்.
புதிய வர்த்தகர் Mindset : கர்வம், பேராசை, வருத்தம், அதிர்ச்சி, அவநம்பிக்கை, சந்தோஷம், புரளி கேளும்மை, துக்கம், கோவம், அபரிதமான நம்பிக்கை.
ஆனால் ஒரு சிறந்த வர்த்தகர் என்பவர் சந்தையின் அடிப்படைகளையும், தொழில்நுட்பங்களையும் மற்றும் ஒழுக்கமான வர்த்தக முறைகளின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொண்டு பங்குவர்த்தகத்தை தற்காலிகமாக நிறுத்திவிட்டு ஒரு தெளிவான வர்த்தக திட்டத்தை உருவாக்கி அதை நீண்ட நாள் பரிசோதித்து அதன்பின் பொறுமையாக மறுபடியும் பங்குவர்த்தகத்தில் நுழைந்து தெளிவாக செயல்பட்டு லாபங்களை ஈட்டத் தொடங்குவார்.
சிறந்த வர்த்தகர் Mindset : புரிந்து கொள்ளுதல், ஒப்புக் கொள்ளுதல், கட்டுப்படுத்துதல், நம்புதல்.
Post a Comment
Post Your Valuable Comments 💬 And Requests In The Comment Section🗳️
If You Like👍 This Post Please Share It On Social Website🌐