ஒரு நிறுவனத்தின் பங்கு விலை எதற்கெல்லாம் விலை ஏறும் இறங்கும்?

எந்தெந்த விஷயங்களுக்கு ஒரு நிறுவனத்தின் பங்கு விலை ஏறும் அல்லது இருப்பதில் இருந்து இறங்கும் என்பதை முதலில் பார்ப்போம்.
எதற்கெல்லாம் விலை ஏறும்?

எந்தெந்த விஷயங்களுக்கு ஒரு நிறுவனத்தின் பங்கு விலை ஏறும் என்பதை முதலில் பார்ப்போம்.

 • கம்பெனியின் நல்ல Results : அந்த நிறுவனம் அரை ஆண்டிலோ, முழு வருடத்திலோ, முன்பை விட நன்கு செயல்பட்டு இருந்தால், அதன் லாபம் அதிகரித்து இருந்தாலும் அல்லது நஷ்டம் குறைந்தாலும். ஆமாம் அதுவும் நல்ல அறிகுறிதானே பின்னால் லாபமீட்டும் என்ற நம்பிக்கையில்.
 • பெரிய வியாபார  வாய்ப்புகள்நிறுவனத்துக்கு எதுவும் பெரிய, புதிய வியாபார லாப வாய்ப்புகள் கிடைத்தால்.
 • அரசின் சுலபமான Capital Goods இறக்குமதிக் கொள்கை. இறங்கும் விலைவாசி Inflation குறைய வேண்டும். இறங்கும் கடன் வட்டி விகிதங்கள் தொழில்  முனைவோருக்கு அதிக பலன். குறைக்கப்படும் வருமான வரி கலால் வரி மற்றும் விற்பனை வரி விகிதங்கள்.
 • FII வாங்குவது: அந்நிய நாட்டு நிதி நிறுவனங்கள் இந்தப் பங்கினை தொடர்ந்து வாங்கினால் மற்றும் வாங்கிக் கொள்ளக் கூடிய அளவு உயர்த்தப்பட்டால். நம் நாட்டுக்கு வரும் FDI - Foreign Direct Investment அதிகமானதால்.
 • Buy Back, Merger: நிறுவனம் நடத்தும் முதலாளிகள் அவர்கள் தான் நிறைய பங்குகள் வைத்திருக்கும் Promoters வெளிச் சந்தையில் இருந்து தங்கள் நிறுவன பங்குகளை வாங்க முன்வருவது Buy Back. Merger வேறு ஒரு நல்ல நிறுவனத்துடன் இந்த நிறுவனத்தை இணைப்பதாக செய்து வருதல்.
 • பங்குகளை பிரித்தல் Splitting of shares: 10 ரூபாய் முகப்பு விலை உள்ள பங்கினை, ரூபாய் 5 or 2 or 1 ஆக்குவது.
 • பங்குச்சந்தையில் குரூப் மாற்றுவது: தற்சமயம் சுமாரான குரூப்பில் List ஆகியிருந்து பங்குசந்தையினரால் மாற்றப்பட்டால் அதேபோல Cash Market மட்டும் இல்லாமல் F & O  அனுமதிக்கப்படுவது.
 • Nasdaq, NYSE முதலிய அமெரிக்க பங்குச்சந்தையில் இந்த நிறுவனங்களின் பங்குகள் List செய்யப்படுதல். அங்கு அந்தப் பங்குகளின் விலை உயர்தல்.
 • வரிச் சலுகைகள்: அரசாங்க அறிவிப்புக்களில் பட்ஜெட் போல இந்த நிறுவனத்திற்கு சாதகமான வரி கொள்கை மாற்றங்கள், வேறு கொள்கை மாற்றங்கள் வருதல் Export policy. நிறுவனங்களுக்கு லாபமளிக்கும் அரசின் ஏற்றுமதிக் கொள்கை.  அரசிடமிருந்து, தொழில்களுக்கு சாதகமான கொள்கை அறிவிப்புகள்.
 • Short covering: நிறுவனம் நல்ல நிலையில் உள்ளபொழுது தவறுதலாக Speculation நிறைய பேர் நிறைய ஷேர்களை விற்று விட்டால், அவற்றை அவர்கள் அவசரமாக திரும்ப வாங்கும் பொழுது.
 • நிறுவனத்தில் நடந்து கொண்டிருந்த வேலைநிறுத்தம் முதலியவை நிறுத்தப்பட்டால். ஏதாவது பெரிய பணம் வர வேண்டிய வழக்குகளில் நிறுவனம் வெற்றி பெற்றால்.
 • இவர்களுடைய முக்கிய போட்டியாளர்களுக்கு பெரிய சிரமம் ஏற்பட்டால்.
 • இவர்கள் தயாரிக்கும் பொருள்களுக்கு சந்தையில் தட்டுப்பாடு ஏற்பட்டால் மற்றும் இவர்களுடைய இடுபொருள் Raw material விலை விழுந்தால்,கிடைப்பது சுலபம் ஆனால்.
 • அமைதி, போர் இல்லாமை, உள்நாட்டுக் கலகங்கள் இல்லாமை. உலக அளவில் இறக்கும் கச்சா எண்ணெய் விலை.
 • ஏறும் ரூபாய் மதிப்பு, இறங்கும் வெளிநாட்டு நாணய மதிப்பு. ஆனால் இதனால் ஏற்றுமதியை நம்பி இருக்கும் தொழில்களின் லாபம் பாதிக்கப்படும். அதனால் அவற்றின் பங்கின் விலைகள் குறையும்.
 • Statistics, GDP: தேசப் பொருளாதாரம் பற்றிய நல்ல புள்ளி விவரங்கள் வெளிவருதல். நல்ல விவசாய உற்பத்தி. இது GDP வளர்ச்சியை முடிவு செய்யும்.


எதற்கெல்லாம் விலை இறங்கும்?

எந்தெந்த விஷயங்களுக்கு ஒரு நிறுவனத்தின் பங்கு விலை இறங்கும் என்பதை  பார்ப்போம்.

 • எதிர்பார்த்த அளவு நிறுவனத்தின் வியாபார லாப Result வராதது.
 • குறுகிய காலத்தில் விலைகள் நிறைய ஏறிவிட்டதால், நிறையப் பேருக்கு பணம் தேவைப்படும் நேரம் பங்குகளை விற்கும்போது Profit booking வரும். இடையில் அதிகமான விடுமுறை நாட்கள் வந்தால். ஆமாம், அடுத்த சனி, ஞாயிறு உடன் வேறு விடுமுறைகள் வந்தால், மார்க்கெட் கொஞ்சம் இறங்கும். பின்பு ஏறிவிடலாம், இது வேறு விஷயம்.
 • திடீர் நஷ்டங்கள் புயல், வெள்ளம், நிலநடுக்கம், தீவிரவாதிகள் தாக்குதல்.
 • அரசிலோ, நிறுவனத்திலோ, பங்குச்சந்தைலோ பெரிய ஊழல். மைய அரசின், மாநில அரசின் பட்ஜெட்டுக்கு முன்போ, பின்போ, புதிய வரிவிதிப்புகள், வரி விலக்குகள் பாதக சூழ்நிலைகளை உருவாக்கும் என்ற பயத்தால்.
 • நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் போது. புதிய அரசு எப்படி இருக்குமோ என்ற பயத்தில். தேர்தல் முடிவுக்குப் பிறகு நிலையான ஆட்சி அமையுமோ அமையாதோ என்ற பயத்தில் இது ஒரு முக்கிய காரணி.

Post a Comment

Post Your Valuable Comments 💬 And Requests In The Comment Section🗳️

If You Like👍 This Post Please Share It On Social Website🌐

Previous Post Next Post