இப்புதிய விதிமுறை மாற்றங்கள் வரி செலுத்துவோர், முதலீட்டாளர்கள், டெபாசிட் தொகை வைத்துள்ளோர் மற்றும் வாடிக்கையாளர்கள் மீது பாதிப்பை ஏற்படுத்தும்.
திருத்தப்பட்ட வருமான வரி தாக்கல் Revised ITR செய்வதற்கான காலக்கெடு மாற்றங்கள் மற்றும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் உள்ளிட்டவை குறிப்பிடத்தக்கவை.
மாற்றித்தரப்பட்ட கார்டுகள் உட்பட அனைத்து புதிய Debit மற்றும் Credit கார்டுகளையும், ATM மற்றும் PoS முனையங்களில் உள்நாட்டு பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
அட்டைதாரர்கள், தங்கள் Debit and Credit cards' மூலம் ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் Contactless Payment உள்ளிட்ட வேறு எந்த வசதிகளையும் பயன்படுத்த விரும்பினால், சேவைகளை பெற தங்கள் வங்கியை அணுகி பதிவு செய்தால் தான் அனுமதி வழங்கப்படும்.
வாடிக்கையாளர்கள் இந்தியாவுக்கு வெளியே தங்கள் கார்டுகளை பயன்படுத்த விரும்பினால், அவர்கள் தங்கள் வங்கியை அணுகி சர்வதேச பரிவர்த்தனை சேவையை ஆக்டிவேட் செய்ய வேண்டும்.
இப்போது வரை, பெரும்பாலான வங்கிகள் வழங்கும் கார்டுகளை உலகளவில் எங்கும் பயன்படுத்தமுடியும் என்ற நிலையே இருந்து வருகிறது.
இடர் காரணிகள் அடிப்படையில் பயன்பாட்டில் உள்ள கார்டுகளை செயலிழக்கச் செய்வதற்கும், அவற்றை மீண்டும் வழங்குவதற்கும் வங்கிகளுக்கு உரிமை உண்டு. மேலும், எந்த ஒரு தனிநபரும் இதற்கு முன்னர் ஆன்லைன் பரிவர்த்தனைகள், சர்வதேச பரிவர்த்தனைகள் மற்றும் Contactless Payment தங்கள் அட்டையைப் பயன்படுத்தவில்லையோ, அவர்களின் அட்டையை முடக்க வங்கிக்கு அதிகாரம் உண்டு.
Credit & Debit Cards வைத்திருப்பவர்கள் தங்கள் Cards முழுவதையுமோ அல்லது ATM, ஆன்லைன் பரிவர்த்தனைகள் போன்ற குறிப்பிட்ட வசதியை மட்டுமோ மாற்றியமைக்கவும், நீக்கவும் வசதி உண்டு. மேலும், வாடிக்கையாளர்கள் தங்கள் பரிவர்த்தனை வரம்புகளை தாங்களே நிர்ணயித்துக்கொள்ளலாம்.
24 * 7 Service
வாடிக்கையாளர்கள் தங்கள் சேவை வரம்புகளை மாற்றி அமைக்கக்கூடிய வசதிகளை, 24 * 7 செயல்படும் மொபைல் செயலிகள் மற்றும் நெட் பேங்கிங் சேவை மூலம் வங்கிகள் வழங்க வேண்டுமென்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. வங்கிக் கிளைகள் மற்றும் ஏடிஎம்களிலும் இச்சேவைகள் இருக்க வேண்டும்.
NFC Technology Based Card
பல வங்கிகள் NFC தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கார்டுகளை வழங்கி வருகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கார்டுகளை ஸ்வைப் செய்யவோ அல்லது PoS முனையத்தில் சொருகவோ தேவையில்லை. இவை Contactless Payment என்றும் அழைக்கப்படுகின்றன.
வாடிக்கையாளர்கள் NFC அம்சத்தை செயல்படுத்தும் அல்லது முடக்கும் தெரிவைப் பெறுவார்கள்.
Pirident Gift Card
குறிப்பாக Pirident gift card மற்றும் வெகுஜன போக்குவரத்து அமைப்புகளில் பயன்படுத்தப்படும் அட்டைகளுக்கு இந்த புதிய வசதிகள் பொருந்தாது.
Post a Comment
Post Your Valuable Comments 💬 And Requests In The Comment Section🗳️
If You Like👍 This Post Please Share It On Social Website🌐