நீங்களும் மகிழ்ச்சியை விரும்பினால் பின்வரும் 5 வழிகளை பின்பற்றிப் பாருங்கள் மகிழ்ச்சி நிச்சயம்.
நம் கட்டுப்பாட்டில் இல்லாத வெளிப்புற காரணிகள் உள்பட பல்வேறு விஷயங்கள் நம் மகிழ்ச்சியினை தீர்மானிக்கின்றன.
மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபட்ட காரணங்களாக மரபியல் 50%, நம் உடல் ஆரோக்கியம் மற்றும் வருமான அளவு உள்ளிட்டவை 10 - 20 % இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. வேறு விதமாக சொல்வதானால், சிலர் மற்றவர்களை விட மகிழ்ச்சியை அதிகமாக உணர்கின்றார்கள்.
நீங்களும் மகிழ்ச்சியை விரும்பினால் பின்வரும் 5 வழிகளை பின்பற்றிப் பாருங்கள் மகிழ்ச்சி நிச்சயம்.
1. செயலில் ஏதாவது செய்யுங்கள்
- உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பு ஆகியவை மகிழ்ச்சியை அதிகரிக்கும் சிறந்த வழிகளில் ஒன்று என்கின்றது இது ஒரு ஆய்வு.
- உடற்பயிற்சி மற்றும் உடல் உழைப்பால் ஏற்படும் மாற்றங்களுக்கும் அமைதிப்படுத்தும் ஹார்மோன்களும் உடலையும் மனதையும் அமைதி படுத்துகின்றன. இதனால் மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு ஏற்படுகிறது இது நேர்மறையாக நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும்.
2. புதிதாக ஏதாவது செய்யுங்கள்
- நமக்கு பிடித்தவற்றை அல்லது விரும்புவதை மட்டுமே மீண்டும் மீண்டும் தொடர்ந்து செய்து கொண்டிருப்பது மகிழ்ச்சியைத் அதிகரிக்க மிகப்பெரிய தடையாக இருக்கின்றது. இவை நல்ல விஷயங்களாக இருந்தாலும் கூட பெரிய அளவில் மகிழ்ச்சியை அதிகரிக்காது.
- ஆகவே, ஒரே விஷயத்தை தொடர்ந்து செய்வதற்கு பதிலாக, பலவகைப்பட்ட செயல்களை வித்தியாசமாக செய்து பாருங்கள். உங்கள் மகிழ்ச்சி கூடும்.
3. வேறொருவருக்காக ஏதாவது செய்யுங்கள்
- உங்களின் மகிழ்ச்சியை அதிகரிக்க சிறந்த வழி அடுத்தவர்களின் மகிழ்ச்சிக்கு உதவுவது தான்.
- பணத்தை உங்களுக்காக செலவிடுவதைவிட மற்றவர்களுக்கு அதிகம் செலவிடும் போது, அது மகிழ்ச்சியை அதிகரிப்பதற்காக ஆய்வில் தெரியவந்துள்ளது.
- ஆகவே, உங்கள் மகிழ்ச்சியை அதிகரிக்க ஒரு நல்ல நோக்கத்துக்கு நன்கொடை அளிக்கலாம் அல்லது நண்பரின் பிறந்தநாளுக்கு சிறந்த பரிசளிப்பது போன்றவற்றை செய்யலாம்.
4. சுவாரஸ்யமாக ஏதாவது செய்யுங்கள்
- நேர்மறையான செயல்பாடுகளை முழு ஈடுபாட்டுடன் அனுபவிப்பது உங்கள் மகிழ்ச்சிக்கு முக்கிய அடிப்படையாக இருக்கும்.
- நற்செயல்களில் ஈடுபடும் போது, அதில் முழு கவனத்தை செலுத்தி அந்த அனுபவத்தை சுவைக்க வேண்டும். மாறாக, அச்செயல்கள் நடைபெறும் போது கவனத்தை சிதறவிடாமல், உங்கள் அந்த மகிழ்ச்சியைப் பெறவே முடியாது.
5. ஒன்றும் செய்ய வேண்டாம்
- உண்மையில் நாம் எதிர்பார்ப்பது போல பெரிய வெற்றிகள் நமக்கு அதிக மகிழ்ச்சியை அளிப்பதில்லை. இதனால் ஏமாற்றமும் வருத்தமும் ஏற்படுகின்றது. சில நேரங்களில், நாம் எதையும் பெரிதாக எதிர்பார்க்காத தருணங்களில், எதையும் வேண்டாத சாதாரண கணங்களில் தான் பெரும் மகிழ்ச்சியை உணர்கிறோம்.
- ஆகவே, எதிர்பார்ப்புக்களை விட ஒவ்வொரு தருணத்தையும் அர்த்தமுள்ளதாக்குவது மகிழ்ச்சியை அதிகரிப்பதை உணரலாம்.
COMMENTS