மனிதன் வாழ்க்கை கணக்கு! கணக்கே வாழ்க்கை!!

மனிதன் வாழ்க்கை கணக்கு!


5 வயதில்‌ விரல்களை எண்ணினான்‌,
1௦ வயதில்‌ எண்களை எண்ணினான்‌,

15 வயதில்‌ மதிப்பெண்களை எண்ணினான்‌,
2௦ வயதில்‌ தேர்வு வினாக்களை எண்ணினான்‌,

25 வயதில்‌ சம்பளத்தை எண்ணினான்‌,
30 வயதில்‌ நண்பர்களை எண்ணினான்,

35 வயதில்‌ வாரிசுகளை எண்ணினான்,
40 வயதில்‌ கடன்களை எண்ணினான்,

45 வயதில்‌ நோயை எண்ணினான்‌,
5௦ வயதில்‌ சொந்தங்களை எண்ணினான்‌,

55 வயதில்‌ மாத்திரையை எண்ணினான்‌,
6௦ வயதில்‌ பேரக்‌ குழந்தைகளை எண்ணினான்‌,


அதற்கு பின்‌ வயதை எண்ணினான்‌, இறந்த பின்‌, தனக்காக அழும்‌ உள்ளங்களை எண்ணினான்‌.

எண்ணிப்‌ பார்க்கையில்‌ , தன்னிடம்‌ கூடவே இருந்தது கணிதம்‌ மட்டூம்‌ தான்‌ என எண்ணினான்‌ !!
விடை என்னவோ தொடக்கமும்! ‌ முடிவும்‌ " 0 " தான்‌.

வாழ்க்கையே கணக்கு! கணக்கே வாழ்க்கை!!

( கழித்தல்‌, கூட்டல்‌, பெருக்கல், வகுத்தல்‌ -, +, × , ÷ )

வயது 10 முதல்‌ 25 வரை

 1. தீய பழக்கங்களை குறைத்துக்‌ கொள்‌ (கழித்தல்‌)
 2. நல்ல பழக்கங்களை கூட்டிக்‌ கொள்‌ (கூட்டல்‌)
 3. திறமையை பெருக்கிக்‌ கொள்‌ (பெருக்கல்‌)
 4. நல்ல வாழ்க்கையை வகுத்துக்‌ கொள்‌ (வகுத்தல்‌)

வயது 26 முதல்‌ 40 வரை

 1. செலவை குறைத்துக்‌ கொள்‌ (கழித்தல்‌)
 2. வருமானத்தைக்‌ கூட்டிக்‌ கொள்‌ (கூட்டல்‌)
 3. சேமிப்பை பெருக்கிக்‌ கொள்‌ (பெருக்கல்‌)
 4. செழிப்பான வாழ்க்கையை வகுத்துக்‌ கொள் (வகுத்தல்‌)

வயது 41 முதல்‌ 55 வரை

 1. உணவை, ஆசையை குறைத்துக்‌ கொள்‌ (கழித்தல்‌)
 2. நடையை கூட்டிக்‌ கொள்‌ (கூட்டல்‌)
 3. சிரிப்பை பெருக்கிக்‌ கொள்‌ (பெருக்கல்‌)
 4. உடல்‌ ஆரோக்கியத்திற்கான வழியை வகுத்துக்‌ கொள்‌ (வகுத்தல்‌)

வயது 55 முதல்‌ .....

 1. பேராசையை, கோபத்தை, பகைமையை குறைத்துக்‌ கொள்‌ (கழித்தல்‌)
 2. அன்பைக்‌ கூட்டிக் கொள் (கூட்டல்‌)
 3. ஆன்மீகத்தை பெருக்கிக்‌ கொள்‌ (பெருக்கல்‌)
 4. நோயற்ற வாழ்வை வாழ வழி வகுத்துக்கொள்‌ (வகுத்தல்‌)

ஒரு நிமிடம் சிந்தியுங்கள்


பிறப்பு : அடுத்தவர்‌ கொடுத்தது

பெயர்‌ : அடுத்தவர்‌ வைத்தது

கல்வி : அடுத்தவர்‌ தந்தது

வருமானம்‌ : அடுத்தவர்‌ அளிப்பது

மரியாதை : அடுத்தவர்‌ கொடுப்பது

முதல்‌ மற்றும்‌ கடைசி குளியல்‌: அடுத்தவர்‌ செய்வது

இறந்த பின்‌ சொத்துக்களை: அடுத்தவர்‌ எடுத்துக்‌ கொள்வது

இறுதி சடங்கு: அடுத்தவர்‌ செய்வது

ஒரு நிமிடம்‌ சிந்தியுங்கள்,‌ இப்படி எல்லாமே நம்‌ வாழ்க்கையில்‌ அடுத்தவர்கள்‌ துணையோடு இருக்கும்‌ போது, எதற்கு இந்த ஈகோவும்‌, பிரச்சனைகளும்‌ அன்புடனும்‌ ஆதரவுடனும் ஒற்றுமையாக வாழ்வோம்‌.
1 Comments

Post Your Valuable Comments 💬 And Requests In The Comment Section🗳️

If You Like👍 This Post Please Share It On Social Website🌐

Post a Comment

Post Your Valuable Comments 💬 And Requests In The Comment Section🗳️

If You Like👍 This Post Please Share It On Social Website🌐

Previous Post Next Post